Tamil Cinema News | சினிமா செய்திகள்
வந்தா மிரட்டலா தான் வருவேன் சிம்பு அதிரடி… 2.0 படத்தில் சிம்பு!
சிம்பு நடித்து வெளிவந்த ‘செக்க சிவந்த வானம்’ மிகுந்த எதிர்பார்ப்புடன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் ரிலீசாகப் போகும் படம்தான் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ இப்படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது ஒரு சில பிரச்சினைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் சிம்பு தரப்பில் கூறுகையில் கண்டிப்பாக இப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று கூறியுள்ளார். இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் அனைத்தும் விரைவில் ரசிகர்களுக்காக வெளியிடப் போவதாக கூறியுள்ளனர் படக்குழுவினர். இப்படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

vrv-str
2.0 படத்தின் இடைவேளையில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் ட்ரைலர் வெளிவரும் என்று சிம்பு தரப்பில் கூறியுள்ளனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்த்தது போல் சிம்பு ராஜாவாக வருவார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

simbu-vrv
