சிம்புவுடன் க்ளிக்கிய போட்டோவுடன், மாநாடு பட லேட்டஸ்ட் அப்டேட்டை பதிவிட்ட வெங்கட் பிரபு.

சென்னையில் நடக்கும் தன் தம்பி குறளரசன் திருமணத்திற்காக சிம்பு லண்டனில் இருந்து வந்தார். அவரின் போட்டோஸ் இணையத்தில் வைரலானது. ஸ்லிம் + பிட் சிம்புவாக அவர் மாறியது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டம் தான்.

சென்னையில் உள்ள itc grand chola ஹோட்டலில் திருமண வரவேற்பும், நேற்று நடைபெற்றது. NGK ஆடியோ, ட்ரைலர் வெளியிட்ட உடன் சூர்யா வந்தார். லதா ரஜினிகாந்த், சிம்புவுடன் mufti கன்னட ரீமேக்கில் நடிக்கும் கவுதம் கார்த்திக், மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட படம் மாநாடு. அரசியல் சார்ந்ததாக, ரொமான்ஸ், பைட்ஸ் அனைத்தும் கலந்த கலவையாக உள்ள படம் என முன்பே இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார்.

சுரேஷ் காமாட்சி மற்றும் சுப்பு பஞ்சு இணைந்து தயாரிக்கும் இப்படம் இம்மாதத்தில் ஷூட்டிங் துவங்கும் என பதிவிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Leave a Comment