fbpx
Connect with us

கே.ஜி.எஃப் பட ஸ்டைலில் தாடியுடன் பிளாக் அன்ட் பிளாக்கில் மாஸாக போஸ் கொடுக்கும் சிம்பு

Photos | புகைப்படங்கள்

கே.ஜி.எஃப் பட ஸ்டைலில் தாடியுடன் பிளாக் அன்ட் பிளாக்கில் மாஸாக போஸ் கொடுக்கும் சிம்பு

டி ராஜேந்திரன் அவர்கள் தனது மகனான சிம்புவை சிறு வயதிலிருந்தே தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது, பாட, ஆட வைப்பது என பன்முக திறமை உடையவராக ஆகிவிட்டார்.

மிகவும் குறைந்த வயதில் சிம்பு தொட்ட உச்சங்கள் ஏராளமோ ஏராளம். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, சிம்புவின் இந்த அசுரர் வளர்ச்சி அவரை அதலபாதாளத்திற்கு தள்ளியது. தொடர்ந்து சர்ச்சை, ஷூட்டிங் செல்வதில்லை, படத்தில் அதீத குறுக்கீடுகள் என பீல்ட அவுட் ஆனார். நடிகர் சங்கம் ரெட் கார்ட் கொடுக்கும் அளவுக்கு சென்றது நிலை. உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான தோற்றத்தில் இருந்தார்.

நடுவில் செக்க சிவந்த வானம் நல்ல ஹிட். வந்தா ராஜாவா தான் வருவேன் பிளாப் ஆனது. கவுதம் கார்த்திக்குடன் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் படமென இரண்டும் பாதியில் நின்றது.

str-simbu

str-simbu

லாக் டவுனில் தற்போது 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார் சிம்பு. அடுத்தடுத்த பட அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. சுசீந்திரன் படம் முடித்த உடன் மாநாடு ஷூட்டிங் துவங்குகிறது.

மனிதர் சமூகவலைத்தளங்களிலும் மீண்டும் வந்தார்.

str

கடவுளுக்கும் தன் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றிகளை பகிர்ந்தார். இவர் பதிவிட்ட இந்த போட்டோஸ் மாஸ் வரவேற்பை பெற்றுள்ளது.

str simbhu

அப்படியே தலைவன் படங்களும் நடிக்கட்டும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க தலைவா என ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

Continue Reading
To Top