என்ன வச்சு படம் பண்றேன்னு சொன்னீங்களே, இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே.. கே வி ஆனந்த்-ஐ பார்த்து கதறும் நடிகர்

அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மரணமடைந்த செய்தி கோலிவுட் சினிமாவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கே வி ஆனந்த் பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர். அதன் பிறகு முன்னணி இயக்குனர்களின் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்திலும் ஒரு விதமான அரசியல் கருத்துக்களுடன் சேர்ந்த கமர்ஷியல் படங்களாக தான் இருக்கும். அதனால் மினிமம் கியாரண்டி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருந்ததாகவும், அது பற்றி தொடர்ந்து சிம்புவிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தன்னுடைய இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார் சிலம்பரசன்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கோ படத்தின் முதல் ஹீரோவே சிம்பு தான். அப்போது அந்த படத்தை தவற விட்டு பின்னாளில் அவர் வருத்தப்பட்டார் எனவும் செய்திகள் கிடைத்தது.

தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் சிம்புவுக்கு தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்கள் பட வாய்ப்புகள் கொடுத்து வந்த நிலையில் சிம்பு கே வி ஆனந்த் கூட்டணி உருவாக இருந்தது. ஆனால் தற்போது மாரடைப்பு காரணமாக கேவி ஆனந்த் இறந்ததை மிகவும் வருத்தத்துடன் அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார் சிலம்பரசன்.

str-statement-about-kv-anand
str-statement-about-kv-anand
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்