Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது ஓவியாவிற்காக சிம்பு பாடும் “காதல் கடிக்குது” பாடல் ரெகார்டிங் வீடியோ !
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியாவின் மார்க்கெட் பன் மடங்கு உயர்ந்த விட்டது. ஒருபுறம் விளம்பரங்கள், கடை ஒபெநிங் மறுபுறம் பிஸியான சினிமா ஷூட்டிங். ஓவியா தற்பொழுது லாரன்ஸின் ‘காஞ்சனா 3’, ‘ஓவியாவை விட்டா யாரு’, ‘சீனி’, விஷ்ணு விஷாலின் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, விமலுடன் இணைந்து ‘களவாணி 2‘, 90 ml ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.
90 மில்லி
மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் மற்றும் குளிர் 100 படத்தை இயக்கியவர் அனிதா உதீப். இவர் தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ இல்லாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம் இப்படத்திற்கு சிம்பு இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. எடிட்டிங் ஆன்டனி. ஓவியா டீ குடிப்பது போன்ற முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல ரிச் ஆனது.
இந்நிலையில், இப்படத்திற்காக சிம்பு ‘காதல் கடிக்கிது’ என்ற பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் கம்போஸிங்கின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரிலீஸாகி வைரலாக பரவி வருகிறது.
விரைவில் இந்த சிங்கள் பாடல் ரிலீஸ் ஆகும் என்று சிம்புவும் தெரிவித்துள்ளார்.
