அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படத்திற்கு பின் சிம்பு மீண்டும் கெட்டவன் பட வேலைகளை ஆரம்பிக்கப்போவதாக தன ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டார். பின் எந்த தகவலும் இன்றி அமைதியாக இருந்து வந்தார்.

மணிரத்தினம் இயக்கம் மல்டி- ஸ்டார்கள் நடிக்கும் படத்தில் சிம்புவும் ஒருவர் என்ற தகவல் வந்தது. எனினும் மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.  இந்நிலையில் சிம்புவின் புதிய லுக்கில் உள்ள  போட்டோ நேற்று இரவு முதல் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இது மணி சார் படத்துக்காக சிம்புவின் கெட் அப், என்று கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.