Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

செம்ம கெமிஸ்ட்ரி! வைரலாகுது ஈஸ்வரன் சிம்பு, நிதி அகர்வால் போட்டோ

தற்பொழுது கோலிவுட்டின் ஹாட் டாபிக் சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து தான். மனிதர் வேற லெவல் என அனைவரும் சொல்லும் படி மாறிவிட்டார். மாநாடு ஷூட்டிங் துவங்கும் முன், ஒரு மினி ப்ரொஜெக்டில் கமிட் ஆனார் சிம்பு. ஒரு மாதத்தில் ஷூட்டிங் சாத்தியமா என யோசித்த நேரத்தில் முழு ஷூட்டிங் முடிந்து, தீபாவளி முன்னிட்டு டீசரும் வெளியாகிறது என்பது நாம் அறிந்த செய்தியே.

பாரதிராஜா, பால சரவணன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 10 ஷூட்டிங் ஆரம்பம். நவம்பர் 6 ஷூட் முடிந்தது. தற்பொழுது இன்று நவம்பர் 8 டப்பிங் முடித்துவிட்டார் சிம்பு.

str eeswaran

ஈஸ்வரன் படத்தில் சிம்பு டூரிஸ்ட் கைடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் சிம்புவிற்கு பழனி முருகன் என்பதே கதாபாத்திர பெயராம். அப்பாவுக்கும் மகனுக்கும் (பாரதி ராஜா – சிம்பு ) இடையேயான பாசப் போராட்டம்தான் படம் என்கிறார்கள்.

str nidhi agarwal in eeswaran

இந்நிலையில் வெளியான இந்த போட்டோ ட்விட்டரில் பலரது லைக்ஸ் பெற்று வருகின்றது.

Continue Reading
To Top