தாடி பாலாஜி – அவர் மனைவி நித்யா விவகாரம் நாம் அறிந்ததே. முதலில் எதோ TRP ரேட்டிங் எதுவதற்க்காக நடக்கிறது என்று தான் நம்மில் பலர் நினைத்தோம். எனினும் நாட்கள் செல்ல செல்ல விவகாரம் விசுவரூபம் ஆனது. மாற்றி மாற்றி குறை சொல்வது, போலீஸ் கம்பளைண்ட் என கை மீறியது விவகாரம்.

இந்நிலையில் நித்யா பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சிம்பு தன்னிடம் போனில் பேசியதாகவும், பாலாஜியுடன் சேர்ந்து வாழுமாறும் வேண்டிக்கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

balaji
இதோ சிம்பு பேசியது குறித்த தொகுப்பு ..

‘திடீர்னு ஒருநாள் ஒரு நம்பர்லயிருந்து போன் வந்தது. `நான் சிம்பு பேசறேன் சிஸ்டர். பாலாஜி விஷயமா கொஞ்சம் பேசலாமா’ன்னு கேட்டாங்க. சிம்பு சார் வாய்ஸ்தான். ஆனா, மிமிக்ரியில யார் வேணாலும் பேசலாமே… அதுவும்போக பாலாஜி இதுக்கு முன்னாடி பலபேரை விட்டு இப்படிப் பேச வச்சிருக்கார். அதனால, `சிம்பு பேசறேன்’னு வம்பு பேசாதீங்க; போலீஸ்ல புகார் பண்ணிடுவேன்’னு சொல்லிட்டு, போனைக் கட் பண்ணிட்டேன். மறுபடியும் கால் வந்திச்சு. `நானேதான், நம்புங்க சிஸ்டர்’னு சொன்னதும், அப்ப வீடியோ கால் வாங்க’னு சொன்னேன். `சரி’னு வீடியோ கால்ல வந்தார்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார். ஆரம்பத்துலயிருந்து எங்க விவகாரத்தைக் கவனிச்சிட்டே வந்திருக்கார். ‘வீடு’னு இருந்தா பிரச்னை இருக்காதா’, ‘நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலாம்’, ‘நீங்க உங்க பொண்ணோட டிவி-யில வந்ததைப் பார்த்தபோது மனசுக்கு கஷ்டமா இருந்தது. அந்தக் குழந்தை முகத்துக்காகப் பார்க்கக் கூடாதா’ங்கிற மாதிரி நிறைய பேசினார். கூடவே, நான் பேசின எல்லாவற்றையும் பொறுமையாக் கேட்டார். கடைசியா, ‘உங்க குழந்தைக்காகவும் அதே நேரம் எனக்காகவும் இந்த ஒரு முறை பாலாஜியை மன்னிச்சு, சேர்ந்து வாழுங்க’னு கேட்டுக்கிட்டார்.

‘என்னைப் பற்றி வெளியில அவதூறா நிறைய பேசிட்டார்; அதுக்கெல்லாம் திறந்த மனதோட மன்னிப்புக் கேட்பாரா’னு நான் கேட்டேன். அதுக்குப் ‘பேசறேன்மா’ன்னார்.

‘அப்பா பரமசிவன், நான் அவரோட கோபக்கார மகனான முருகன்னு நினைச்சுக்கோங்க. என் பேச்சை நிச்சயம் கேட்பார் பாலாஜி. ஒருவேளை இந்த முறை ஒழுங்கா நடக்காட்டி, அப்புறம், நானே உங்களுக்கு சப்போர்ட்டா நிற்கின்றேன்’ என்று சொல்லி முடித்தாராம் சிம்பு.

 

“பெரிய ஸ்டார் அவர். இந்த விவகாரத்துல இன்வால்வ் ஆகணும்னு என்ன அவசியம். எனினும் அவர் கேட்டுக்கிட்டும் என்னால உடனடியா சாதகமான பதிலைச் சொல்ல முடியலையேனு நினைக்கிறப்ப, கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்திச்சு” என்கிறார் நித்யா.