Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிக பிரம்மாண்ட படத்தில் கமலுடன் இணையப்போகும் சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்!
இயக்குனர் ஷங்கர் பிரண்ட்ஸ் படத்தில் சிம்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அவர் இருந்த சூழ்நிலையில் அதை நடிப்பதற்கு மறுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது இந்தியன்-2 படம் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டது அதில் சிம்புவிற்கு நடிப்பதற்கான ஒரு வாய்ப்பினை இயக்குனர் ஷங்கர் அழைப்பு விடுத்துள்ளார். மிகப் பிரம்மாண்ட இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்பது ரசிகர்களை ஒரு பெரும் மகிழ்ச்சியான செய்தி.
இதைப் பற்றி எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் இருக்கும்போது இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் தான் அவரை படத்திற்கு அழைத்து வருவதாகவும் கூறியுள்ளார். இது சிம்பு ரசிகர்கள் இடையே மிகப் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடித்த பின்பு சிம்புவின் திறமை இன்னும் சற்று மெருகேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் தனக்கென்று ஒரு கொள்கையுடன் இருக்கும் சிம்புவின் தைரியம் பாராட்ட கூடியதாகும்.

str-r15
இப்படத்தின் மூலம் அவருக்கு சினிமா துறையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் படத்தில் மகன் கமல் கொல்லப்படுகிறார் ஆகையால் அந்த கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு ஏற்ற கமர்சியல் லுக் சிம்புவிடம் இருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆகையால் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்பு நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
