Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ் ரௌடியாக சிம்பு! பத்து தல படத்தின் கலக்கலான புதிய போஸ்டர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ் ரௌடியாக சிம்பு! பத்து தல படத்தின் கலக்கலான புதிய போஸ்டர்கள்

கே இ ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் 20 வது படமாக ஆரம்பிக்கப்பட்டது தான் சூப்பர் ஹிட் கன்னட படமான முஃட்டி ரீ மேக். ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய நாரதன் இயக்கத்தில் இப்படம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சிம்புவின் சொதப்பலால் பாதியில் அம்போ என கைவிடப்பட்ட ப்ரொஜெக்ட்.

கதைப்படி போலீசாக ஸ்ரீ முரளி (தமிழில் கவுதம் கார்த்திக்), டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் (சிலம்பரசன்) மிரட்டியிருப்பர். போலீஸ் என்பதனை மறைத்து தாதா உலகிற்குள் சென்று அந்த வில்லனை மடக்க வேண்டும்.

இந்த மாஸ் ஆக்ஷன் படம் சிம்புவின் ரீ என்ட்ரிக்கு பின் மீண்டும் துவங்கப்பட உள்ளது. மாநாடு ஷூட்டிங் முடிந்த பின் அவர் நடிக்கும் படம் இது தான். கால்ஷீட் பிரச்சனை காரணமாக இயக்குனர் நாரதன் விலகிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சூர்யாவின் சில்லுனு ஒரு காதல், ஆரியின் நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தில் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

முழுவதும் ரீ ஷூட் அல்லது முன்னர் இயக்கிய காட்சிகளை பயன்படுத்த போகிறார்களா என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. இப்படத்தில் கலையரசன், மனுஷ்யபுத்திரன், டீஜே அருணாச்சலம், பிரியா பவனி ஷங்கர் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.

patthu thala

இரண்டு நாட்களுக்கு முன் புதிய போஸ்டர்கள் வெளியானது. ஏ ஆர் ரஹ்மான் இந்த போஸ்டர்களை ரிலீஸ் செய்தார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

patthu thala

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top