Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்புவை இயக்க ரெடியாகும் சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர்- அட சத்தியமா செட் ஆகாது பாஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்புவை இயக்க ரெடியாகும் சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர்- அட சத்தியமா செட் ஆகாது பாஸ்

சிம்பு தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து சர்ச்சை, ஷூட்டிங் சரியாக செல்வதில்லை, படத்தில் அதீத குறுக்கீடுகள் என பீல்ட அவுட் ஆனார். நடிகர் சங்கம் ரெட் கார்ட் கொடுக்கும் அளவுக்கு சென்றது நிலை. உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான தோற்றத்தில் இருந்தார். தொடர்ச்சியாக பிளாப், புகார்கள் என சிக்கலில் சிக்கினார். லாக் டவுனில் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறினார் சிம்பு.

ஈஸ்வரன் முடித்துவிட்டு மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இவர் அடுத்து நடிக்கும் படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய படம் அல்ல, பாதியில் விட்ட படத்தின் தொடர்ச்சி.

முஃட்டி- 2017 இல் நாரதன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம். போலீசாக ஸ்ரீ முரளி, டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மிரட்டியிருப்பர். அதே படத்தினை தான் நம் ஊருக்கு ஏற்றது போல மாற்றி ரெடி செய்தார் இயக்குனர். கே இ ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்த இப்படத்தில் போலீஸ் வேடத்தில் கவுதம் கார்த்திக்கும், ரவுடி ரோலில் சிம்பு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.

எனினும் சிம்பு சரியாகப் படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சிம்பு தனது மீதி பகுதிகளை நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளதாக சொல்கின்றனர்.

படத்தின் இயக்குனர் நாரதன், தனது அடுத்த பட ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருப்பதனால், மீதமுள்ள காட்சிகளை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

str gawtham karthik

ஜனவரியில் ஷூட்டிங் துவங்கும் என்கின்றனர். எனினும் உடல் இடை குறைந்த சிம்பு எப்படி அந்த ரோலுக்கு மீண்டும் தன்னை எப்படி மற்ற முடியும் என்பது புரியாத புதிர் தான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top