Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட இத்தனை சிம்புவா? வைரலாகுது மாநாடு செகன்ட் லுக் போஸ்டர்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தற்போது தோற்றத்தில் மட்டும் மாற்றத்தை கொடுக்காமல் செயலிலும் மாற்றத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
மாநாடு .. இது வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் என டேக் லயன். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் படத்தை முனைப்பாக ரெடி செய்து வருகின்றனர். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் அஞ்சனா கீர்த்தி, எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
சிம்பு அப்துல் காளிக் என்ற ரோலில் நடிப்பது நாம் அறிந்த விஷயமே. கலவரம் நடக்கும் இடத்தில தொழுகை செய்யவது போன்ற சிம்புவின் போஸ்டர் காலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
குண்டுடன் தொழுகை செய்யும் முதல் லுக் போஸ்டர் தொடர்ந்து, கையில் துப்பாக்கியுடன் பல சிம்பு இருக்கும் இரண்டாவது போஸ்டர் சில மணிநேரம் முன்பு வெளியானது.

str in maanadu slp
அநீதி நடக்கும் பொழுதெல்லாம்.. நான் வருவேன் – அப்துல் காளிக்
