Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாநாடு பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
கொரோனா தொற்று மற்றும் அந்த லாக் டவுன் பலருக்கு பின்னடைவை கொடுத்தது. ஆனால் சிம்பு புத்துணர்வுடன் திரும்பினார். பேட் பாய் டு குட் பாய் அவதாரம் எடுத்துள்ளார் சிம்பு. அடுத்தடுத்து படங்கள் என மனிதர் செம்ம பிஸி. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரெடி ஆகி வரும் படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜெ. சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இன்று சிம்புவின் பிறந்தநாள் முன்னிட்டு 2 .34 மணிக்கு படத்தின் டீஸர் வெளியானது. அப்துல் காளிக் என்ற ரோலில் சிம்பு நடித்துள்ளார். இது வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் என டேக் லயன் ஆனால் அரசியல் வாசம் துளி கூட டீசரில் இல்லை.
மேலும் சிம்பு போட்டிருக்கும் இன்பினிட்டி டாலர், சிம்பு தவிர மற்றது அனைத்தும் பின் நோக்கி செல்வது, நேரம் இவனுக்காக மட்டும் காத்திருக்கும், REWIND என்ற வார்த்தையும் உள்ளது என பல டைம் ட்ராவல் பற்றிய குறியீடுகள் டீசரில் உள்ளது. ஸ்டைலிஷ் மேக்கிங், அசத்தலான இசை என வெளிவந்த சில நிமிடங்களில் வைரலாகி விட்டது இந்த டீஸர்.
எனினும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டென்ட் படத்தை தழுவி தான் இந்த டீஸர் முழுவதுமே உள்ளது. எனவே இது காப்பி என சொல்ல ஆரம்பித்துவிட்டனர் நெட்டிசன்கள்.

tenet nolan
எனினும் சொல்லாமல் தன் படத்தின் ஜானரை சொல்லிவிட்டார் வெங்கட் பிரபு. இது வெறும் டீஸரே, ட்ரெண்டுக்கு ஏத்தது போல வெங்கட் பிரபு அமைத்திருக்கிறார். தன் படத்தில் டைம் ட்ராவல் அல்லது dejavu போன்ற சமாச்சாரம் உள்ளது என கோலிவுட் ரசிகர்களுக்கு சொல்லிவிட்டார்.
எது எப்படியோ இருக்கட்டும் தலைவன் பிறந்தநாளுக்கு ஏற்ற ஸ்பெஷல் கொண்டாட்டமே இந்த டீஸர் என்பதே நிஜம்.
