Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஈஸ்வரன் புதிய போஸ்டருடன் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி வெளியானது! ‘செம்ம அடி’ பாட்டாமே
ஒரு காலகட்டத்தில் சிம்பு என்றாலே வம்பு என இருந்தது. அந்த காலம் மாறிப்போய் சிம்பு என்றால் அன்பு என்ற நிலை வந்து விட்டது கோலிவுட்டில். அதற்கு காரணம் சிம்பு மீண்டும் தன்னுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தது தான்.
தன்னுடைய புதிய, பழைய படங்களை வேகமாக நடித்து முடித்து வருகிறார். மேலும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சொல்லும் நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து பெரிய குறுக்கீடு ஏதும் இன்றி நடித்து அனைவரயும் ஆச்சரியப்படுத்தி வருகிறாராம்.
வெங்கட் பிரபுவின் மாநாடு புதுச்சேரி ஷூட்டிங் முடிந்துவிட்டது. சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக வேகமாக நடந்துவருகிறதாம். படம் பொங்கல் ரிலீஸ். புத்தாண்டில் ட்ரைலர் வரும் என எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு தமன் இசை அமைத்துள்ளார். டிசம்பர் 14 அன்று பாடல் வெளியாகிறது. இப்படத்தில் ஜோடியாக நிதி அகர்வால், அப்பா வேடத்தில் பாரதி ராஜா, தங்கையாக நந்திதா ஸ்வேதா, மற்றும் நண்பனாக பால சரவணன் நடித்துள்ளனர்.

str in eeswaran
