Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஈஸ்வரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு மற்றும் ரசிகர்கள்! வைரலாகுது போட்டோ, வீடியோ
சிம்புவின் மாற்றங்கள் தமிழ் சினிமாவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவே தோன்றுகிறது. எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார் சிம்பு, நடிக்க முயற்சித்த படங்களும் சர்ச்சையில் தான் சிக்கியது.
உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான தோற்றத்தில் இருந்தார். லாக் டவுனில் தற்போது 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ளார் சிம்பு. அடுத்தடுத்த பட அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படம் தமிழ் மட்டுமன்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் வெளியாகிறது. இந்த பொங்கல் ரிலீஸ் படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். சிம்புவின் தங்கை ரோலில் நந்திதா ஸ்வேதா கமிட் ஆகியுள்ளார்.

simbu-str
விஜயதசமி முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரும் கொண்டாடினர். தற்பொழுது தினமும் சிம்புவை காணவேண்டும் என கூட்டம் கூட்டமாக ஷூட்டிங் ஸ்பாட் செல்கின்றனர்.

str in eeswaran shooting spot with fans
அங்கு எடுத்த போடோஸை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
