Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்னது இம்புட்டு வேகமா? வைரலாகுது போட்டோவுடன் சிம்பு தட்டிவிட்ட ஈஸ்வரன் அப்டேட்
தற்பொழுது கோலிவுட்டின் ஹாட் டாபிக் சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து தான். மனிதர் வேற லெவல் என அனைவரும் சொல்லும் படி மாறிவிட்டார்.
மாநாடு ஷூட்டிங் துவங்கும் முன், ஒரு மினி ப்ரொஜெக்டில் கமிட் ஆனார் சிம்பு. ஒரு மாதத்தில் ஷூட்டிங் சாத்தியமா என யோசித்த நேரத்தில் முழு ஷூட்டிங் முடிந்து, தீபாவளி முன்னிட்டு டீசரும் வெளியாகிறது என்பது நாம் அறிந்த செய்தியே.

STR AS eeswaran
பாரதிராஜா, பால சரவணன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ளனர். திண்டுக்கல் சுற்றயுள்ள பகுதிகளில் ஒரே ஷேட்யூலில் முடித்துவிட்டனர் படப்பிடிப்பை.
அக்டோபர் 10 ஷூட்டிங் ஆரம்பம். நவம்பர் 6 சுட முடிந்தது. தற்பொழுது இன்று நவம்பர் 8 டப்பிங் முடித்துவிட்டாராம் சிம்பு.

str in eeswaran dubbing
அவர் பதிவிட்ட இந்த ஸ்டேட்டஸ் வைரலாகி வருகின்றது. என்னடா இது ஜெட் வேகமா இருக்கு என அனைவரும் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
