Tamil Cinema News | சினிமா செய்திகள்
“சிம்பு நீ என்றுமே சாம்பியன் தான்” – வைரலாகுது அருண் விஜய் – சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோ !
செக்க சிவந்த வானம்
மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் படம். மணிரத்தினம் இயக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், இசை ரஹ்மான். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்.

Chekka Chivantha Vaanam – CCV
மிக வேகமா நடந்து வந்த இந்த மல்டி – ஸ்டார்கள் நடிக்கும் படம் சினிமா தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்போது சினிமா வேலைநிறுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்‘ படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.
அவ்வப்பொழுது படத்தை பற்றிய அப்டேட் அல்லது போட்டோ வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் அருண் விஜய் , சிம்புவுடன் தான் எடுத்துக்கொண்ட செலஃபீ ஒன்றை தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Nothing has changed in this young man i have known all these years.. always a champ. Kind at heart and a power performer. Keep the happy spirit in u alive always Simbu.There is no looking back from now on in all your future endeavours! Keep riding high brother.. #CCV #STR pic.twitter.com/3a88qYAAXv
— ArunVijay (@arunvijayno1) May 6, 2018

Arun Vijay – STR
“இத்தனை வருடங்கள் ஆகியும் எந்த ஒரு மாற்றமும் இல்லை .. எப்பொழுதுமே சாம்பியன் . இளகிய மனதுக்காரர். பவர்புல் பர்பாமர். உன்னுள் உள்ள சந்தோஷத்தை அப்படியே வைத்துக்கொள். பழசை நினைத்து யோசிக்காதே, உன் வருங்காலத்தை நோக்கி செல். வாழ்த்துக்கள் பிரதர்.” என்றும் சொல்லியுள்ளார்.
