Tamil Cinema News | சினிமா செய்திகள்
விரைவில் இடியுடன் கூடிய மழை.. சிம்புவுடன் இணையப்போகும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா
பன்முகத் திறமைகள் கொண்ட நடிகர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியம் தான். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிம்பு. என்னதான் சிம்புவை பற்றி தயாரிப்பாளர்கள் தவறாக பேசினாலும் அவருடைய மார்க்கெட் ஏறுமுகமாக தான் இருக்கிறது. அதைவிட சிறப்பம்சம் அவரது ரசிகர்கள் அவரை விட்டுக் கொடுக்காமல் இருக்கின்றனர்.

little super star ra parthiban
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்புவின் கம் பேக் பற்றி இயக்குனர், நடிகர் பார்த்திபனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் SIMBU ஒரு சுயம்பு, Master of All ஆர்ட்ஸ் என பெருமையாக பேசினார். மேலும் சிம்பு தான் முடிவு செய்ய வேண்டும் படம் பண்ணுவது பற்றி எனவும் கூறினார்.
இந்நிலையில் இன்று பார்த்திபனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய இல்லத்துக்கு பூங்கொத்து, சாக்லெட்கள் அனுப்பி வைத்துள்ளார் சிம்பு. இது தொடர்பாக பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது …..
“‘சுயம்பு’ சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர். சிம்பு நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் எண்ணப் புத்தகத்தில்!. “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் work பண்ணலேன்னு”. அதாகப்பட்டது…. விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!”

STR thanks Ra Parthiban
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.விரைவில் சிம்பு – பார்த்திபன் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அப்படியில்லையெனில் பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பட்சத்தில் தாறுமாறு அப்டேட் தான். காத்திருப்போம்.
