Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படத்தின் கதை இது தான். எந்த படத்தின் ரீ மேக் தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு – கவுதம் கார்த்திக் இணையும் படத்தின் கதை இது தான். எந்த படத்தின் ரீ மேக் தெரியுமா ?

STR 45 பட அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

கே இ ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் 20 வது படம். மெகா பட்ஜெட் ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். நாரதன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். மதன் கார்க்கி பாடல்கள் மற்றும் வசனம் எழுதுகிறார்.

முஃட்டி

Mufti – 2017 இல் நாரதன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம். அதே படத்தினை தான் நம் ஊருக்கு ஏற்றது போல மாற்றி இயக்குகிறாராம் இயக்குனர்.

போலீசாக ஸ்ரீ முரளி, டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மிரட்டியிருப்பர். போலீஸ் என்பதனை மறைத்து தாதா உலகிற்குள் சென்று அந்த வில்லனை மடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரோணபுரா என்ற ஊரிற்குள் செல்வார். அங்கு என்ன நடப்பது என்பதை தான் neo-noir ஜானரில் ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் ஆக எடுத்திருப்பர்.

mufti

தமிழில் போலீஸ் வேடத்தில் கவுதம் கார்த்திக்கும், ரவுடி ரோலில் சிம்பு நடிக்கின்றனர். ஒரிஜினல் வெர்ஷன் ஒளிப்பதிவாளர் நவீன் குமார் இப்படத்திலும் கமிட் ஆகியுள்ளார். விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகுமாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top