Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபாஸிற்கு கதை ரெடி- தென்னிந்திய ரசிகர்களின் பேவரட் இயக்குனர் அறிவிப்பு
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை தற்போது பாலிவுட்டிற்கே சவால் விடும்படி வளர்ந்து வருகின்றது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாகுபலி-2 வெற்றிக்கு பிறகு பாலிவுட்டே அசந்து தான் போய்வுள்ளது.
இந்நிலையில் பிரபாஸ் தற்போது இந்தியாவே அறியும் நடிகராகிவிட்டார், இவரை இயக்க பல இயக்குனர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர்.
தற்போது ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தான் பிரபாஸிற்காக ஒரு கதை ரெடியாக வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், அதில் காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஒரு முக்கியமான ரோலில் நடிப்பார், ஆனால், இதற்கெல்லாம் ஒரு நேரம் அமைய வேண்டும், அப்படி அமைந்தால் கண்டிப்பாக எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
