Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவில் கதையை திருடும் கோமாளிகள்..

story-threaten

Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் கதையை திருடும் கோமாளிகள்..

தமிழ் சினிமாவில் இருக்கும் உதவி இயக்குனர்கள் ஒரு கதையை உருவாக்க பணம் செலவு செய்ய வேண்டியதில்லை கொஞ்சம் மூளைக்கும் மனதுக்கும் அமைதியாக வேலை கொடுத்தாலே போதும் ஒரு நல்ல கதை உருவாகிவிடும்.

கதை உருவாக்கிய உதவி இயக்குனர்கள் அதை படமாக எடுக்க ஒவ்வொரு தயாரிப்பாளர் அலுவலகங்களும் நடிகர்களின் வீடுகளும் ஏறி ஏறி இறங்க வேண்டும். சினிமாவில் நல்ல நட்பு வட்டாரங்கள் இருந்தால் ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நடிகரையும் சுலபமாக சென்று கதையை சொல்லிவிடலாம். ஆனால் சினிமாவில் நட்பு வட்டாரங்கள் எதுவுமே இல்லை என்றால் அவர்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.

அடித்து பிடித்து ஒரு நடிகரிடம் தயாரிப்பாளரிடம் கதையை சொல்ல நேரம் கிடைத்தால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் யாருடைய உதவியாளர், எந்த படத்தில் வேலை செய்திருக்கிறீர்கள் என தயாரிப்பாளர்கள் கேட்பார்கள்.

நடிகர்கள் கதை கேட்பதில்லை ஒருவேளை கதையைக் கேட்டாலும் முழு கதையுடன் எழுதி கொண்டு வாருங்கள் என உதவி இயக்குனர்களை அனுப்பிவிடுகிறார்கள். இதை நம்பி அந்த உதவி இயக்குனர்களும் முழு கதையையும் தயார் செய்து செல்கிறார்கள். இல்லை என்றால் முழுக் கதையையும் கேட்கிறார்கள். கதை பிடித்திருந்தால் அதை அப்படியே மனதில் வைத்துக்கொண்டு தனக்கு தெரிந்த இயக்குநர்களிடம் சொல்லி அந்தக்கதையை எடுப்பார்கள்.

இதை தெரிந்துகொண்ட உதவி இயக்குனர்கள் எழுத்தாளர் சங்கத்தில் முறையிடுவது பிறகு பஞ்சாயத்து நடப்பதும் இப்போது அதிகரித்துவிட்டது. கதையை திருட நினைத்த இவர்களுக்கு கதை திருடினால் வரும் பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்த இவர்களுக்கு ஒரு கதையை உருவாக்க முடியாதா? அதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. இன்று படத்துக்கு படம் திருட்டு திருட்டு என்று உதவி இயக்குனர்கள் சொல்கிறார்கள் கதையை ஒருவரிடமிருந்து அவருக்கு தெரியாமலே திருடி தான் எடுக்க வேண்டுமா?

அதற்கு அந்த இயக்குனரையே வைத்து படம் எடுக்க கூடாதா இந்த கேள்விக்கு பதிலே இல்லை அதிலும் சில இயக்குனர்கள் மேல்நாட்டு கதைகளை திருடுவதும், இல்லையென்றால் நல்லா ஓடி வெற்றி பெற்ற படங்களில் இருந்து சில காட்சிகளை திருடி அதையே ஒரு படமாக எடுக்கிறார்கள். அதை தெரிந்து கொண்டு எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டாலும் கைமேல் பலன் இல்லை கோர்ட்டுக்கு சென்றால் அவர்களை மடக்கி ஒரு சிறிய தொகையை கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள்.

பெரிய இயக்குனர் முதல் நேற்று வந்த புதுமுக இயக்குனரின் படங்கள் வரை எல்லாம் திருட்டு திருட்டு என கூறுவது தமிழ் சினிமாவுக்கு ஆபத்தாக இருக்கும். ஒரு நல்ல கதைக்கு மதிப்புக் கொடுங்கள் அவர்களை வைத்து படம் எடுங்கள் ஒரு கனவுடன் இருக்கும் இயக்குனர்களுக்கு வாழ்க்கையை கொடுங்கள். அல்லது குறைந்த பச்சம் அந்த கதையை பணம் குடுத்து வாங்கி கொள்ளுங்கள். நன்றியுடன் சினிமாபேட்டை

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top