வெங்காயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்றால்.. மத்திய அரசு கடும் எச்சரிக்கை

டெல்லி: வெங்காயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் கடும் மழை, வெள்ளத்தால் வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக வெங்காய வினியோகம் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை உயர் மட்டக்குழு கூட்டத்தை நேற்று அதிரடியாக கூட்டி வெங்காய விலை நிலவரம் குறித்து ஆய்வு செய்தது.

இதில் வெங்காயத்தின் விலையை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது.
வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்கி வைத்தாலோ, லாபகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது

தேவைப்பட்டால் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதின் அவசியம் குறித்து ஆராயப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment