fbpx
Connect with us

Cinemapettai

20 வருடங்களுக்கு மேலாக ஒருமுறை கூட அஜித் படத்தை போடாத சேனல்.. விஜய் படம் மட்டும் வாரத்துக்கு நான்கு முறை!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

20 வருடங்களுக்கு மேலாக ஒருமுறை கூட அஜித் படத்தை போடாத சேனல்.. விஜய் படம் மட்டும் வாரத்துக்கு நான்கு முறை!

தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் தற்போதைக்கு முக்கியமான நடிகர்கள். இவர்கள் இருவரும் மட்டுமே அதிக அளவு தியேட்டருக்கு ரசிகர்களை இழுக்கும் வல்லமை கொண்டவர்கள்.

சினிமாவில் மட்டும் அல்லாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விஜய், அஜித் படங்கள் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தை தொட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் சேனல் தொடங்கியும் 26 வருடங்களாக தல அஜித்தின் படத்தை ஒரு முறை கூட ஒளிபரப்பாக சேனல் ஒன்று இருக்கிறது.

அது வேறு ஒன்றுமல்ல. ஸ்டார் விஜய் தான். தளபதி விஜய்யின் படங்கள் வாரத்திற்கு குறைந்தது நான்கு முறையாவது விஜய் டிவி மற்றும் விஜய் சூப்பர் சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது. ஆனால் தல அஜித்தின் ஒரு படம் கூட சேனல் தொடங்கிய இத்தனை வருடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பவில்லையாம்.

பெரும்பாலான உரிமைகள் ஜெயா டிவி மற்றும் சன் டிவி ஆகியவையே அஜித் படங்களை வாங்கியுள்ளனர். இதில் ராஜ் டிவி, ஜெயா டிவி, சன் டிவி போன்ற சேனல்களில் தல அஜித்தின் பல படங்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளன. அதாவது மூன்று சேனல்களிலும் அந்த படத்தை போட்டுக் கொள்ளலாம் என்பதே.

பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் சன் டிவி போன்ற பெரிய சேனல்களுக்கு நெருங்கியவர்களாக இருப்பர். ஆனால் சமீபத்தில் அஜித் ரீமேக் பிங்க் படத்தின் ஹிந்தி உரிமம் ஸ்டார் விஜய் இடம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் நேர்கொண்டபார்வை படத்தை ஜீ தமிழ் வாங்கி வெளியிட்டது.

சன் டிவி போன்ற பெரிய சேனல்கள் அஜித் படத்தை போடும்போது விஜய் டிவியில் ஒரு படம் கூட என்னும் வாங்கவில்லை என்பது தான் கொடுமை. வாங்கவில்லை என்று சொல்வதை விட அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்வதே சரியாக இருக்கும்.

சன்டிவி பெரும்பாலும்  பட பூஜை ஆரம்பிக்கும் போதே அனைத்து படங்களையும் வாங்கி விடுகிறது என்பது மற்ற சேனல்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.

Continue Reading
To Top