Tamil Nadu | தமிழ் நாடு
ஆப்பிள் மேல் இருக்கும் ஸ்டிக்கர் என்ன தெரியுமா? இனிமே வாங்கும்போது கவனியுங்கள்
ஆப்பிள் மேல் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர் அர்த்தம் என்ன தெரியுமா ? அது எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை பற்றிய சின்ன தகவல்.
ஆப்பிள் வாங்கும் போது பலரும் கவனிக்காமல் இருப்பது அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர். அதில் சில அர்த்தங்கள் உள்ளன. ஆனால் அதன் உண்மை பலருக்கும் தெரியாது. அதில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று இருக்கிறது .
PLU Code ( price look up number ) வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா இல்லை, மரபணு மாற்று உற்பத்தியா, கெமிக்கல் உரங்களினால் விளைந்ததால் என நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
எவ்வாறு அறிவது
Plu Code 4 எண்கள் இருந்தால் முழுக்க வேதி உரம் கலந்தது என்பது அர்த்தம்.
அதுவே Plu Code 5 இலக்கம் இருந்து அது 8 என ஆரம்பித்தால் மரபணு மாற்றம் செய்யபட்டது.
Plu Code 5 இலக்கம் இருந்து அது 9 என ஆரம்பித்தால் அந்த ஆப்பிள் முழுக்க முழுக்க இயற்கையானது என அர்த்தம்.
இவ்வாறு அந்த ஆப்பிளில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் மரபணுவால் செய்யப்பட்டதா இல்லை இயற்கையானதா என கண்டறிய முடியும் என கூறியுள்ளனர்.
