Connect with us
Cinemapettai

Cinemapettai

எந்த பௌலரும் செய்யாததை இந்த இந்தியர் செய்து விட்டார்.. விரக்தியில் புலம்பும் ஸ்டீவ் ஸ்மித்

steve-smith

Sports | விளையாட்டு

எந்த பௌலரும் செய்யாததை இந்த இந்தியர் செய்து விட்டார்.. விரக்தியில் புலம்பும் ஸ்டீவ் ஸ்மித்

மாடர்ன் கிரிக்கெட் உலகத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கும் ஒருசிலரில் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர். ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மான் என்பது மட்டுமன்றி சிறந்த கேப்டனாகவும் இருக்க வேண்டியவர். எனினும் மைதானத்தில் செய்த தவறு காரணமாக, இன்று மூன்று வித பார்மட் போட்டிகளிலும் வீரராக மற்றும் ஆடி வருகிறார்.

ஆஸ்திரேலிய, இந்திய டீம்கள் மோதும் பார்டர் காவஸ்கர் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவதில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளார். எனவே உலக கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தை அதிகம் பெற்றுள்ளது இந்த டெஸ்ட் போட்டிகள்.

பந்துவீச்சில் கலக்கினாலும் பேட்டிங்கில் சற்றே சொதப்பி வருகிறது ஆஸ்திரேலியா. இதற்கு முக்கிய காரணம் வார்னர் டீம்மில் ஆடாதது மற்றும் ஸ்மித் தடுமாறுவது தான். ரன்குவிப்பு மெஷின் என அழைக்கப்படும் ஸ்டீவ் ஸ்மித் 4 இன்னிங்சில் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அஸ்வின் பந்தில் இரண்டு முறை அவுட் ஆகியுள்ளார்.

இதனை பற்றி பின்வருமாறு சொல்லியுள்ளார் ஸ்மித்..

“நான் நினைத்த விதத்தில் அஸ்வின் பந்துவீச்சை ஆடவில்லை. நான் அவரை நெருக்கடியான சூழலுக்கு தள்ளியிருக்க வேண்டும். ஆனால் நான் அவரை என் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டேன். எனது கேரியரில் இது போல எந்த சுழற்பந்து வீச்சாளரையும் இது போல செய்ய விட்டது கிடையாது, நான் ஆக்ரோஷமாக செயல்பட்டு, அழுத்தத்தை அவர்களுக்கு கொடுப்பேன், எனவே அவர்கள் திட்டத்தை மாற்றுவார்கள்.

இருபுறமும் கூர்மையான கத்தி போன்ற நிலை இது, எனினும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு நான் எனது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ashwin smith

இப்போதைக்கு களத்தில் சிறிது நேரம் நின்று செட்டில் ஆகி ஆடவேண்டும், அதுதான் எனக்கு முக்கியமானது. இந்த ஆண்டில் நான் 64 பந்துகள் ஆடியதுதான் அதிக நேரம் நான் ஆடியதாகும் அதுவும் ஒருநாள் போட்டிகளில். வலைப்பயிற்சியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடலாம்.

ஆனால் நிஜமான போட்டியை அது பிரதிபலிக்காது. அதனால்தான் கிரீசில் நேரத்தைக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அது மிகக்கடினம்தான். ஏனெனில் நல்ல பவுலர்கள் இருக்கும் அணிக்கு எதிராக அவ்வளவு எளிதில் ஆட முடியாது.” என தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top