தோனியை போன்ற சிறந்த வீரரை பார்ப்பதே அறிது என்று இந்திய ஆஸ்திரேலிய இடையேயான டெஸ்ட் தொடரின் போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிரியாக பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி கடந்த ஜனவரி மாதம் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். அதனை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான புனே அணியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் “தோனியுடன் எனக்கு ஒரு அருமையான நட்பு இருக்கிறது. அவர் புனே அணிக்கு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். பந்தை அவர் அடிக்கும் விதம் மிக அருமையாக இருக்கிறது. இனி வரும் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக இதைப் போன்றே சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவர் விக்கெட் கீப்பிங் மின்னல் வேகத்தில் இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் செய்த சில ஸ்டம்பிங்குகள் அசாத்தியமானவை” என்று பிரமித்து பேசியுள்ளார்.