Sports | விளையாட்டு
சச்சினுக்கு நக்கலாக பதிலளித்த ஸ்டீவ் வாக்.. கொலைவெறியில் ரசிகர்கள்
இந்திய முன்னால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா வீரரான மார்னஸ் லபுஷானே தன்னைப்போலவே ஆடுகிறார் என்று கூறியிருந்தார். அதே நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் அதனை பொருட்படுத்தாமல் இருந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.
அதாவது சச்சின் கூறுகையில், சோப்ரா வீசிய பந்தில் மார்னஸ் லபுஷாக்கு அடிபட்டது அடுத்த 15வது நிமிடத்தில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்னை பார்த்தது போல் இருந்தது என்று கூறியிருப்பார்.
இந்த கருத்தை சிறிது கூட பொருட்படுத்தாத ஸ்டீவ் வாக் தற்போது விளக்கம் அளித்துள்ளார். லபுஷானின் உற்சாகமான தற்போதைய ஆட்டத்தை தணிப்பதற்காக சச்சின் டெண்டுல்கர் அவ்வாறு கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சச்சின் கூறுவது போல் இல்லையாம், அவர் எப்பொழுதும் போல் நார்மலாக தான் விளையாடுகிறார் என்று நக்கல் அடிப்பது போல் பதில் அளித்துள்ளார்.
லபுஷான் ஒரு வருடத்தில் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 4வது இடம் பிடித்தது பாராட்டுக்குறியது தான். கடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவரது ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்தது என்றும் கூறியுள்ளார்.
இவர் கூறியுள்ள இந்த சர்ச்சையான கருத்தால் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
