Connect with us

Cinemapettai

பலியான உயிர்கள் அரசை பழிவாங்கும் சித்தார்த் கடும் கோவம்.!

India | இந்தியா

பலியான உயிர்கள் அரசை பழிவாங்கும் சித்தார்த் கடும் கோவம்.!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களை போலீசார் தாக்க துவங்கி, துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாளாக அதிகரித்து வருகிறது இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்றும் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது அப்பொழுது மீண்டும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். அதில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார் இன்று வரை மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளார்.

இந்த போலிஸ்களுக்கு யார் ஷூட்டிங் உரிமை கொடுத்தது.?

முதலில் கூட்டம் இருந்தால் கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்த வேண்டும், இரண்டாவதாக தான் லேசான லத்திசார்ச், அதன் பிறகு மூன்றாவதாக தான் தண்ணீர் பீச்சு இதில் அடங்கவில்லை என்றால் தான் துப்பாக்கி சூடு நடத்தனும் அதுவும் முட்டிக்கு கீழ் தான் ஆனால் தீவிரவாதியை சுடுவது போல் சுட்டு கொன்றுள்ளார்கள் இந்த போலீஸ்.

இதனையடுத்து சினிமா பிரபலங்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி போராட்டத்தில் பலியான ஒவ்வொரு உயிரும் இந்த தமிழ் நாட்டு அரசை பழிவாங்கும், உயிரழிந்த குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், தமிழ் நாட்டின் வரலாற்றில் இன்று கருப்பு தினம்” என்று பதிவு செய்துள்ளார். இதோ அவருடைய பதிவு

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top