Connect with us

Cinemapettai

ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிரான கருத்து.. நடிகைகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

tamil actress

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிரான கருத்து.. நடிகைகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், ஒரு சில பிரபலங்கள் மக்கள் போராட்டத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி, சில சமூக விரோதிகளால்தான் அந்த போராட்டம் திசை மாறியது என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராகக் கிளர்தெழுந்த நெட்டிசன்கள், அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல், துப்பாக்கிச் சூடு நடந்த முதல் நாளில் இதுகுறித்து பேசாமல் சென்னை அணியின் வெற்றி குறித்து சிலாகித்த இயக்குநர் ஷங்கர், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் சர்ச்சையில் சிக்கினர்.

நெட்டிசன்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தூத்துக்குடி சம்பவத்துக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், நடிகர்கள் ரஜினி, கமல், தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம், இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என பிரபலங்கள் பலரும் இந்த சம்பவத்தைக் கண்டித்து குரல் எழுப்பியுள்ளனர். இயக்குநர் பா.ரஞ்சித் மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து சென்னையில் நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில், பிக்பாஸ் புகழ் நடிகை காயத்ரி ரகுராம் ஒரு வீடியோவைப் பதிவிட்டு கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. போலீசார் தாக்கப்படுவது போன்ற வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி, `போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம். ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள்.

நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

அதேபோல், கோ பட நாயகியும், நடிகை ராதாவின் மகளுமான கார்த்திகாவும், ஆர்ஜே பாலாஜி போல் ஒரு கருத்து முத்தை உதிர்த்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறார். இதுகுறித்து அவர் இட்டுள்ள பதிவில்,`தூத்துக்குடியில் சில கலகக்கார குழுக்களால்தான் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது’ என்ற அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் வலுவான எதிர்வினையை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top