fbpx
Connect with us

Cinemapettai

தூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

Tamil Nadu | தமிழ் நாடு

தூத்துக்குடி கலவரம்-தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசாரின் இந்த வன்முறையினை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமி்ழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து இருந்தார்.

இந்த கடையடைப்பு போராட்டத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாக கூறிய அவர், பணம் கொடுத்து டெர்லைட் நிறுவனம் பொதுமக்களை கொன்றுள்ளது என்றும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு பணம் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பணத்தை வாங்கி கொண்டு காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top