CSK Dhoni Fleming

ஐபில்

11 வது சீசனுக்காக 8 அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றது. இந்நிலையில் இன்று தன் முதல் போட்டியில் விலையிடுவதற்காக சென்னை அணி மும்பை கிளம்பியுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று ஸ்டீபன் பிளெமிங் அணி எவ்வாறு தயாரிக்கிறது, துவக்க ஜோடி, ஸ்பின் பௌலிங், இளம் வீரர்கள் என பல விஷயங்களை பற்றி மனம் திறந்த பேசியுள்ளார். அதன் சிறு தொகுப்பு இதோ ..

இந்த சீசனில் தொடக்க வீரர்கள் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. சூழ்நிலையின் அடிப்படையிலேயே தொடக்க ஜோடியை முடிவு செய்வோம்.

CSK

தோனி பேட்டிங் வரிசையில் சற்று முன்னதாக களமிறங்குவார். அவருக்கான பேட்டிங் வரிசை இது தான் என்று எதுவும் நிரந்தரமில்லை. எனினும், ஆட்டத்த்தின் சூழ்நிலைக்கேற்ப அவரது பேட்டிங் வரிசை தீர்மானிக்கப்படும். ஆனால் அவர் பேட்ஸ்மேனாக, இந்த சீசனில் மிக முக்கியமான பங்கை அளிக்கவுள்ளார். ஜாதவ், ராயுடு, ஜடேஜா மற்றும் பிராவோ போன்ற வீர்கள் உள்ளதால் மத்திய வரிசை குறித்து நாங்கள் திட்டம் தீட்ட இடம் உள்ளது. இவர்களாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எங்கள் அணியில் திறமை கொண்ட வீரர்கள் உள்ளனர். ஏராளமான ஆப்சன் உள்ளது.

மிட்செல் சான்ட்னருக்கு மாற்று வீரரை இதுவரை நாங்கள் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் அவசரம் காட்டவில்லை. அணியில் பலதுறையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் பலர் உள்ளனர். தொடர் சிறப்பாக சென்றால் மாற்று வீரரை தேட வேண்டிய சூழல் அமையாது என்றே கருதுகிறேன். பயிற்சி ஆட்டங்களில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோரை பவர் பிளே மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் அதிகம் பயன்படுத்தி உள்ளோம். இவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

CSK

ஹர்பஜன் சிங்குக்கு பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் கூடுதல் பயிற்சி வழங்கி வருகிறோம். ஹர்பஜன் சிங் பந்து வீச்சுக்கு சேப்பாக்கம் ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கும். மேலும் பிட்டாகவும், ஆர்வமாகவும் உள்ளார். கண்டிப்பாக இந்தத் தொடரில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்.