Connect with us
Cinemapettai

Cinemapettai

இது தாங்க எங்க டீமுக்கு பிரச்சனை- புலம்பி தள்ளிய சி எஸ் கே கோச்

csk dhoni fleming

Sports | விளையாட்டு

இது தாங்க எங்க டீமுக்கு பிரச்சனை- புலம்பி தள்ளிய சி எஸ் கே கோச்

கொரானாவின் பயத்தால் இம்முறை ஐபிஎல் போட்டிகளை UAE-க்கு மாற்றினார்கள்.

புதிய சீசன் துவங்கி போட்டிகள் ஜரூராக நடந்து வருகிறது. நம் இந்தியாவில் நடக்காவிட்டாலும் டிவியில் பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்கின்றனர். கொரனாவால் பார்க், பீச், சினிமா செல்ல முடியாத நிலையில் பலரும் டிவி முன் கட்டப்படும் சூழல் எழுந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பொறுத்தவரை மேட்சை பார்ப்பதற்கு குவிந்தத்தை விட தோனியை பார்ப்பதற்கே பலரும் டீவியை ஆன் செய்தனர். முதல் போட்டியில் வென்ற சென்னை டீம், அடுத்த இரண்டு போட்டிகளிலும் பரிதாப தோல்வி அடைந்தது.

சுமாரான துவக்க பேட்டிங், ஸ்பின் எடுபடவில்லை, சொதப்பல் பீல்ட்டிங் என அனைத்திலும் ஆவெரேஜ் ஆன டீம் போலவே தோன்றியது. இம்முறை சென்னை பிலே ஆப் வரை செல்லுமா என பலரும் யோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னை டீம்மின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கொடுத்த பேட்டியின் தொகுப்பே இந்த பதிவு.

எங்களின் ஐபில் 2020 திட்டத்தை பனி என்ற ஒன்று நிலை குலைய வைத்து விட்டது. (டாஸ் வென்ற டீம்கள் பேட்டிங் எடுப்பது என்பது பிற்பாதியில் பந்து வீச பௌலர்களுக்கு எதுவாக இருக்காது என்பது தான்.) ஆனால் ஒரு நாள் பனி அதிகமாக உள்ளது அடுத்த தினம் அதே சமயத்தில் பனி இருப்பதில்லை.

ஷார்ஜாவில் நடந்த போட்டியின் சமயத்தில் மைதானம் ஈரப்பதமாக இருந்தது. சுற்றுப்புறத்தை ஊகித்துகொண்டே இருக்கின்றோம். இரண்டு மைதானங்களில் முதல் போட்டியை நாங்கள் தான் ஆடினோம். எங்களை வைத்து அடுத்த டீம் சுதாரித்துக்கொண்டனர். சிலவற்றை கற்றுக்கொண்டு முன்னோக்கி செல்கிறோம்.

முதலில் கர்ரன், ஜடேஜாவை இறக்கினோம். ஜாதவ், தோனி ஏற்றவர்களாக அடுத்த போட்டியில் தோன்றியது. நிறைய ஆப்ஷன்கள் மத்திய வரிசையில் உள்ளது. நாங்கள் யோசித்து வருகிறோம். எனினும் டாப் ஆர்டரில் நல்ல பங்களிப்பு வரவில்லை, அது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

வெவ்வேறு காம்பினேஷனை முயற்சி செய்தோம், கோச்சிங் மற்றும் திட்டமிடல் படி எந்த சூழலுக்கு எந்த வீரர் ஏற்றவர் என முயற்சித்தோம். எனினும் எங்கள் ஸ்டைல் அது கிடையாது. நாங்கள் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவோம்.” என கூறியுள்ளார்.

சென்னையின் ஆடுகளத்துக்கு ஏற்ற மாதிரியே டீம் செலக்ஷன் உள்ளது சி எஸ் கே விடம். துபாய் மைதானங்கள், தட்பவெட்ப சூழலுக்கு ஏற்றது போல வீரர்கள் தயாராகும் பட்சத்தில் ஏறுமுகம் தான் இந்த டீமுக்கு.

அடுத்த போட்டியில் தாஹிர், பிராவோ, ராயுடு போன்றவர்கள் கட்டாயம் அணிக்கு திரும்புவார்கள் என நம்புவோம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top