கதை திருட்டில் சிக்கியுள்ள கைதி 2.. கார்த்தியின் படத்திற்கு தடை!

கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் தமிழில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்த படம் கைதி. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும், வேறு மொழிகளில் ரீமேக் செய்யவும் தடை விதித்து ராஜீவ் ரஞ்சன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கேரள நீதிமன்றம் இத்தடையை விதித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கடந்த 2000 ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையாம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம் 2007ஆம் ஆண்டு தான் கூறியதாகவும், கதை பிடித்திருந்ததால், இக்கதையை படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை வழங்கியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் சொன்ன கதையின் இரண்டாம் பாகத்தை மட்டும் வைத்து கைதி முழு படத்தையும் அவர்கள் எடுத்துள்ளதாகவும், இதனால் தனக்கு நான்கு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

kaithi
kaithi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்