Sports | விளையாட்டு
சாதனையாளன் என்பவன்.. வைரலாகுது தோனி, ரெய்னா பற்றி சூர்யா பதிவிட்ட ஸ்டேட்டஸ்
இந்தியாவின் முன்னணி வீரர்களான தோனி மற்றும் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக சுதந்திர தினத்தன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.
உலகக்கோப்பை தோல்விக்கு பின் எந்த வித கிரிக்கெட்டிலும் தோனி ஆடவில்லை. UAE யில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதனால் தோனி மீண்டும் வலை பயிற்சியில் ஈடுபட்டார். ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்தனர். எனினும் மனிதர் அடுத்த டி 20 உலகக்கோப்பை தள்ளி போன காரணத்தினால் ஓய்வை அறிவித்து விட்டார்.
தல தோனியின் அறிவிப்பின் சில நிமிடங்கள் கழித்து சின்ன தல சுரேஷ் ரெய்னா தானும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக இன்ஸ்டாக்ராம்மில் அறிவித்தார். 33 வயதாகும் ரெய்னா சிறந்த பீல்டர், டி 20 அதிரடி பேட்ஸ்மான், பந்து வீசும் ஆல் ரவுண்டர். இவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது பலருக்கும் குழப்பம் தான். அடுத்த டி 20 உலகக்கோப்பை இந்தியாவில் தான் நடக்கும், எனினும் ரெய்னா இந்த முடிவை எடுத்துவிட்டார்.
இந்த இருவர் பற்றி ட்விட்டரில் பதிவிட்டார் சூர்யா. “அசல் சாதனையாளன் என்பவன் தனது தொழிலில் வெற்றி அடைவதுடன், மகிழ்ச்சியான குடும்பம் மட்டுமன்றி, இந்த சமூகத்துக்கும் எதாவது திருப்பி கொடுப்பவர்கள் மட்டுமே. என் ஹீரோ தோனி மற்றும் என் நண்பன் ரெய்னா நீங்கள் இருவரும் அப்படி பட்டவர்கள் தான். உங்களின் அடுத்த ஆட்டம் சிறப்பானதாகவே அமையும். வணக்கங்கள், இந்தியாவை ஊக்கிவித்ததுக்கு.. நன்றி”

Surya about dhoni raina retirement
இந்த ஸ்டேட்டஸ் 17500 ரீட்வீட் மற்றும் 92000 லைக்குகள் குவித்தது.
