India | இந்தியா
நாளை முதல் ஏடிஎம்கும் வச்சாச்சி ஆப்பு.. ஆள விடுங்கப்பா இனி பணமே எடுக்கல..
ஏற்கனவே ஏடிஎம்-மில் பணம் எடுப்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புத்தாண்டு பரிசாக மேலும் ஒரு தலைவலியை உருவாக்கியுள்ளது ஸ்டேட் பாங்க் வங்கி நிர்வாகம்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்-மில் பணம் எடுக்கச் செல்லும் நபர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு செயல்படும் OTP முறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரு நாளைக்கு முதன் முதலாக ஏடிஎம் கார்டை உபயோகிக்க இந்த OTP தேவைப்படும். பிறகு எப்பொழுதும்போல் எடுத்துக் கொள்ளலாம்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI). ஏற்கனவே இந்த வங்கியில் பணம் எடுப்பதற்கும் செலுத்துவதற்கும் பல கட்டுப்பாடுகள் உண்டு.
இந்நிலையில் ஏடிஎம் கார்டுக்கும் கட்டுப்பாடு கொண்டு வந்ததால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 10,000 ரூபாய்க்குமேல் பணம் எடுப்பவர்களுக்கு OTP மீண்டும் அனுப்பப்படும் எனவும் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Introducing the OTP-based cash withdrawal system to help protect you from unauthorized transactions at ATMs. This new safeguard system will be applicable from 1st Jan, 2020 across all SBI ATMs. To know more: https://t.co/nIyw5dsYZq#SBI #ATM #Transactions #SafeWithdrawals #Cash pic.twitter.com/YHoDrl0DTe
— State Bank of India (@TheOfficialSBI) December 26, 2019
இதனால் இனி மறந்தும் கைபேசியை வைத்துவிட்டு ஏடிஎம் செல்ல வேண்டாம் என சினிமாபேட்டை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. மறந்துவிடாதீர்கள், மறந்தும் இருந்துவிடாதீர்கள்!
