நடிகர் விஜய் தன்னுடைய படத்தை நேரடியாக டிடிஎச்சில் வெளியிட திடீர் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த வாரம் கடந்த 4 நாட்களாக தியேட்டர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் «ந்றுடன் முடிவுக்கு வந்தது. வழக்கம்போல் நேற்று தியேட்டர்கள் இயங்கின. இந்த வேலைநிறுத்தத்திற்கு ரஜினியும் கமலும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்ததோடு சரி போராட்டத்தில் முழுமையாக ஈடுபடவில்லை.

இவர்களைப் போல் விஜய் மற்றும் அஜித்தும் போராட்டத்திற்கு குரல் கொடுக்கவில்லை. ஆனால் விஜய் குரல் கொடுக்காததற்கு காரணம், அவர் திரையரங்கு உரிமையாளர்களால் அவர் பலமுறை மிரட்டப்பட்டு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு என்ற பெயரில் பணத்தை இழந்துள்ளார்

இந்த நிலையில் தற்போது தான் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தை எந்த விநியோகிஸ்தர்களுக்கும் விற்காமல் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய நடிகர் விஜய் தயாரிப்பாளருக்கு ஆலோசனை கொடுத்துள்ளார். அதற்கு ஒருவேளை திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதிக்கவில்லை என்றால் படத்தை நேரடியாக டிடிஎச் உள்பட டெக்னாலஜி மூலம் ரிலீஸ் செய்யலாம் என கூறியுள்ளார். விஜய்யின் இந்த திடீர் அதிரடி முடிவை பெரிய நடிகர்களும் பின்பற்றுவார்களா என்று தெரியவில்லை.