விஜய்யின் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட வேலையாக படக்குழு டப்பிங் வேலைகளை தொடங்கியுள்ளனர்.

சமூக வலைதளத்தில் அட்லீ டப்பிங் ஸ்டூடியோவில் சிலருடன் நிற்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. மெர்சல் படத்தின் டப்பிங் Knack ஸ்டூடியோஸில் தான் நடக்க இருக்கிறதாம்.

விஜய் நடித்திருக்கும் இப்படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகியாக நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா என பெரிய நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றனர்