ஏலத்தில் விலை போகாமல், மாற்று வீரராக ஐபில் 2018 இல் நுழைந்த வீரர்கள் ! டாப் 5 ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

ஏலத்தில் விலை போகாமல், மாற்று வீரராக ஐபில் 2018 இல் நுழைந்த வீரர்கள் ! டாப் 5 !

News | செய்திகள்

ஏலத்தில் விலை போகாமல், மாற்று வீரராக ஐபில் 2018 இல் நுழைந்த வீரர்கள் ! டாப் 5 !

சம்மர் கிரிக்கெட் திருவிழாவான  ஐபில் கொண்டாட்டம் வரும் ஏப்ரல் 7 தொடங்கி மே மாதம் 27 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் 8 அணிகள் காலத்தில் மோதுகின்றன.9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறும் இதில் , 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆரம்பத்தில் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டு, தற்பொழுது காயம் காரணமாக, மற்றும் தடை காரணமாக விலகியவர்களுக்கு மாற்றாக அணியில் இடம் பிடித்தவர்கள் பற்றிய தொகுப்பே இந்த பதிவு ..

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கோரே ஆண்டர்சன் – நியூஸிலாந்து .

RCB Corey Anderson

ஆஸிதிரேலியாவின் ஆல்ரவுண்டர் கவுல்டர்-நைல்-ஐ 2.2 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது இந்த அணி. ஆனால் அவர் காயம் (முதுகில் ஸ்ட்ரெஸ் பிராக்ச்சர்) அடைந்துள்ளார்.எனவே இவருக்கு மாற்று வீரராக நியூஸிலாந்தின் ஆல் ரௌண்டரான கோரே ஆண்டர்சன் அவர்கள் பேஸ் விளையான 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பெங்களூரு அணி. இவர் இடது கை மத்திய வரிசை பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்துவீச்சாளார். இதற்கு முன் ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்-  மிச்சேல் மெக்லேஙஹன்- நியூஸிலாந்து .

காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹிண்ட்ராப் வெளியேறுகிறார். இவருக்கு மாற்றுவீரராக மிச்சேல் மெக்லேஙஹன் அவர்களை பேஸ் விளையான 1 கோடிக்கு மும்பை எடுத்துள்ளது. 2015 இல் இருந்து தொடர்ந்து மூன்று சீசனாக மும்பைக்கு விளையாடி உள்ள மிச்சேல் 40 போட்டிகள் விளையாடி 54 விக்கெட் எடுத்துள்ளார். 8.6 என்ற ரன் விகிதத்தில். இவ்வளவு சிறந்த வீரரை மும்பை ஏலத்தில் எடுக்கவில்லை என்பதே ஆச்சர்யம், எனினும் ஏலத்தின் பொழுது வேறு  எந்த அணியும் இவரை எடுக்க முயற்சி செய்யவில்லை.

Mitchell McClenaghan

 

தென்னாப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை எடுத்து. தலைவர் ஸ்மித் மற்றும் துணை தலைவர் வார்னருக்கு 12 மாத தடை விதித்தது.

சன்ரைஸர்ஸ்  ஹைராபாத் – அலெக்ஸ்  ஹேல்ஸ் – இங்கிலாந்து

ஆரம்பம் முதலே சன்ரைஸர்ஸ் அணி வர்னருக்கு ஆதரவு தரும் விதமாகவே செயல்பட்டனர். எனினும் இறுதியில் வேறு வழி இல்லாமல் இந்த அணி நிர்வாகம் வர்னருக்கு மாற்றாக இங்கிலாந்தின்  துவக்க ஆட்டக்காரர்   அலெக்ஸ்  ஹேல்ஸ் அவர்களை பேஸ் விளையான ஒரு கோடியில் ஒப்பந்தம் செய்துள்ளது. அதிரடி துவக்க ஆட்டக்காரர் என்பதால் வார்னருக்கு பதில் இவர் தான் தவானுடன் ஒபெநிங் இறங்குவார்.

Alex Hales

ராஜஸ்தான் ராயல்ஸ் – ஹெநெரிச் கிளாஸ்ஸன் – தென் ஆப்பிரிக்கா

ஸ்மித் அணித்தலைவர்   பதவி விலகினார்.  நிர்வாகம் அஜின்க்யா ரஹானே அவர்களை தலைவராக அறிவித்தது. தற்பொழுது தென்னாபிரிக்காவின்  அதிரடி பாட்ஸ்மானும், விக்கெட் கீபேரான ஹென்ரிச் கிளாஸ்ஸன் அவர்களை மாற்று வீரராக எடுத்துள்ளது. கிளாஸ்ஸன் தற்பொழுது நடந்து முடிந்த இந்திய தொடரின் பொழுது நமது ஸ்பின் பௌலர்களை அடித்து துவம்சம் செய்தவர். இவரது பேஸ் விலை 50 லட்சம் தான்.

Heinrich Klassen

கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் – டாம் கர்ரேன் – இங்கிலாந்து.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வந்தார். இந்நிலையில், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபில் தொடரில் பங்கேற்கமாட்டார்.

KKR – TOM CURRAN

மாற்றுவீரராக 23 வயதாகும் இங்கலாந்து மற்றும் சர்ரே அணியின் வேகப்பந்து வீச்சாளரான டாம் கர்ரேன்னை தேர்வு செய்துள்ளது கொல்கத்தா.மத்திய வரிசையில் அதிரடி பேட்டிங்கும் ஆடும் திறன் உடையவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top