மூன்று தலைமுறையாக நடிப்புலகில் இருக்கும் நட்சத்திர குடும்பம்.

சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஒருவர் கொடி கட்டினால், அவரை தொடர்ந்து அவரின் குடும்ப உறவுகளும் எண்ட்ரி கொடுப்பர். இதில் சில நட்சத்திர குடும்பம் மட்டுமே அந்த புகழை அழகாக தக்க வைத்து கொள்ளும். அப்படி, மூன்று தலைமுறையாக நடிப்பில் இருக்கும் டாப் குடும்பம் இதோ உங்களுக்காக!

தெலுங்கு மொழிப் படங்களில் அதிகமாக நடித்தவர் நாகேஸ்வர ராவ். தர்மபத்தினி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். தொடர்ந்து 75 ஆண்டுகளாகப் பல்வேறு வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று முறை தெலுங்கு மொழிக்கான பிலிம்பேரின் சிறந்த நடிகர் விருதை வென்றிருக்கிறார். இவரின் மகன் நாகர்ஜூனா. விக்ரம் படத்தின் மூலம் 1986ம் ஆண்டு நடிகராக அறிமுகமானவர். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் இந்தியிலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். இவரின் மகன் நாக சைதன்யாவும் டோலிவுட் படத்தில் பிஸி நாயகனாக இருக்கிறார்.

karthik

தமிழ் திரைப்பட திரையில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் முத்துராமன். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். இவரை ரசிகர்கள் நவரச திலகம் என அழைத்தனர். அக்காலத்தில் முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார். ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜா படத்தில் கடைசியாக நடித்தார். இவரின் மகன் கார்த்தி. தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என்ற அந்தஸ்த்தை பெற்றவர். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகராக அறிமுகமானவர். இவரின் மகன் கௌதம் கார்த்திக் கோலிவுட்டின் இளம் நாயகனாக இருக்கிறார். அவரின் நடிப்பில் மிஸ்டர் சந்திரமௌலி படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

தமிழ் திரைப்படத்தில் 300க்கும் அதிகமாக படங்களில் நடித்தவர் ‘சிவாஜி’ கணேசன். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் கம்பீரமான குரல், தமிழ் உச்சரிப்பில் அழகு, சிறந்த நடிப்பு ஆகியவையே ரசிகர்களை கட்டி போட்டது. நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். இவரின் மகன் பிரபுவும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் நடிகர் விக்ரம் பிரபு. தாத்தா மற்றும் அப்பாவை போல புகழை பெறாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையானார். தொடர்ந்து, விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு இருக்கிறார்.

keerthi suresh
keerthi suresh

இவரின் அம்மா மேனகாவும் நடிகை தான். இவர் 1980 முதல் 1986 வரை 6 வருடம் மட்டுமே சினிமாவில் இருந்தார். அவர் நடிப்பில் பெரும்பாலான மலையாள படங்களிலே நடித்து இருக்கிறார். இவர் அம்மா சரோஜா பாட்டி. சாருஹாசன் நாயகனாக நடிக்கும் தாதா 87 படத்தில் அவருக்கு மனைவியாக நடிக்கிறார்.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன். 1960-70களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் தன் திறமையை காட்டியவர். இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரின் முதல் மனைவி மகனான ஜார்ஜ் சின்னத்திரையிலும், சினிமாவில் நடித்து வந்தார். இரண்டாவது மனைவி மகனான ஹம்ச வர்தன் தமிழ் சினிமாவில் சில படங்களில் நாயகனாக நைட்த்து இருக்கிறார். பேத்தி தன்யா ரவிசந்திரன் தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் ஜோடி போட்டு இருக்கிறார்.