Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘‘சட்டசபை தேர்தல் வருது, தயாராகுங்க’’ : தொண்டர்களை சூடேற்றிய ஸ்டாலின்
கோவையை அடுத்த சூலூரில் திமுகவின் இளைஞரணி அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் ஆளும் அதிமுகவினரிடையே ஓபிஎஸ் மற்றும் சசிகலா என இரு அணிகளாக பிரிந்து தற்போது ஆட்சியை நடத்த திணறி வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், தற்போது சட்டசபை தேர்தலே நடக்க வாய்ப்புள்ளது. கடுமையாக உழைத்தால் நமக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது.
ஆகவே, இளைஞர்கள் சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு இளைஞரணியில் உள்ள அனைவரும் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும் என தொண்டர்களையும் இளைஞர்களையும் சூடேற்றி விட்டுள்ளார் ஸ்டாலின்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
