Connect with us
Cinemapettai

Cinemapettai

எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்.. கோட்டைக்குள் நுழைவது யார்?

stalin-eps-election-2021

Tamil Nadu | தமிழ் நாடு

எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்.. கோட்டைக்குள் நுழைவது யார்?

இந்தியாவிலேயே அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட தமிழகத் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. அதிலும் பல கலவரங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் சற்று அமைதியாகவே நடந்து முடிந்தது. சில இடங்களில் மட்டும் சில கலவரங்கள் நடந்தன. அதையும் காவல்துறை ஒருவழியாக அடக்கி முடித்துவிட்டனர். தற்போதைய தகவலின்படி 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் அலுவலர்கள் கூறுகிறார்கள். மேலும் மறுவாக்குபதிவு எங்கும்  கிடையாது என்று ஒரேடியாக சொல்லிவிட்டார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடக்கும் முதல் தேர்தல்:

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதுவும் அவர் பதவியில் இருக்கும்போது மறைந்து விட்டதால் அவரின் பதவியை ஓபிஎஸ் இபிஎஸ் என இருவரும் மாறி மாறி பங்கு போட்டுக்கொண்டனர். அப்படியே நான்கரை ஆண்டு காலம் ஓடிவிட்டது. இந்த தமிழக தேர்தல் ஜெயலலிதா இல்லாத அதிமுக அரசு எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும். சசிகலாவுடன் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டனர். தற்பொழுது இருக்கும் இபிஎஸ் ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவின் நிலைமை அடுத்த மாதம் தெரிந்துவிடும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மற்ற கட்சிகள்:

இந்த தேர்தலில் கண்டிப்பாக ஒரு 5 முனை போட்டி என்றே கூறலாம் அந்த அளவிற்கு 5 பக்கத்திலிருந்தும் பெரிய கட்சி, வளர்ந்துவரும் கட்சி என பல கட்சிகள் போட்டியிடுகின்றன. ஸ்டாலின் திமுக, ஈபிஎஸ் அதிமுக, நாம் தமிழர் கட்சியின் சீமான், மக்கள் நீதி மையம் கட்சியின் கமலஹாசன், அமமுகவின் தினகரன் என ஐந்து முனைகளிலும் கடும் போட்டி நிலவுகிறது. இதில் முக்கியமாக திமுக அதிமுக விற்கு அடுத்தபடியாக சீமானின் வாக்கு வங்கியின் எதிர்பார்ப்புதான் மக்களிடையே மிகவும் அதிகமாக இருக்கிறது என கூறுகிறார்கள்.

சசிகலாவின் ஆதரவு நிலைப்பாடு:

ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் தண்டனை முழுவதும் அனுபவித்து வெளியே வந்த சசிகலா மீது மிகவும் அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. பின்னர் அமைதியான முறையில் ஜெயலலிதாவின் அதிமுக அரசுக்கு எதிராக செயல்படவில்லை என அறிவித்து சென்றுவிட்டார். மேலும் அமமுகவிற்கு ஆதரவு  கொடுப்பார் என்றால் அதிலும் இல்லை என்று கூறிவிட்டார். அவர் பதுங்குவது பாய்வதற்கு என்பது இனிமேல்தான் தெரியும் எனவும் கூறுகிறார்கள்.

இந்த தேர்தலில் அதிமுக அரசு பெரிய தோல்வி அடைந்தால் கண்டிப்பாக சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்றே கூறுகிறார்கள். மேலும் சசிகலா இல்லாத அதிமுக அரசு எந்த அளவு மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்பதை வேடிக்கை பார்க்கவே அவர் அரசியலிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாகவும் கூறுகிறார்கள் அவர்களின் நெருங்கிய விசுவாசிகள்.

சர்கார் படத்தின் 49பி விதி:

சர்கார் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த 49b இந்த தேர்தலில் மிகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதி இருப்பது சர்கார் படம் வெளிவந்த பின்னர் தான் பலருக்கும் தெரிய வந்தது. அதன்படி தனது வாக்கை வேறு யாரேனும் போட்டுவிட்டால் தான் இந்த விதியை பயன்படுத்தி மீண்டும் ஓட்டு செலுத்தலாம். அப்படி பல பேர் இந்த தேர்தலில் பயன்படுத்தி தனது ஓட்டை செலுத்தியுள்ளனர். அதற்கு சர்கார் படம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதனால் விஜய்க்கு கூடுதலாக நல்ல பெயர் கிடைத்துள்ளது என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

தல, தளபதியின் வருகை:

இந்த தேர்தலில் ரஜினி, கமல் என பல நடிகர்கள் ஓட்டு செலுத்திவிட்டு வந்தாலும் தல தளபதி செய்த விஷயங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டன. அதில் அஜித் பயன்படுத்திய மாஸ்க் கருப்பு, சிவப்பு நிறத்தில் இருந்தது, மேலும் விஜய் வந்த சைக்கிள் கருப்பு, சிகப்பு நிறத்தில் இருந்ததால் திமுகவிற்கு ஆதரவு என்ன பல இடங்களில் செய்திகள் பரவியது. மேலும் விஜய் பெட்ரோல் விலையை கண்டித்து சைக்கிள் ஒட்டி வந்ததாகவும் ஒரு பக்கம் செய்திகள் ஓடியது. வாக்களிக்கும் நேரத்தில் தமிழ்நாடு முழுக்க பரவி இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இன்னொரு வகையில் பார்த்தால் இதெல்லாம் எதேச்சையாக நடந்ததாகவும் தெரியவில்லை என்கிறார்கள் ஒரு சாரார் மக்கள்.

all politicians

all politicians

முடிவாக யார் தான் வருவா?:

இந்த பிரபலங்களின் கட்சி ஆதரவு நிலைப்பாடும், ஆளும் கட்சி மீது இருந்த கோபங்கள், மாற்றம் வரவேண்டும் என விரும்புவர்கள், மேலும் சமீபத்தில் நடந்த கருத்து கணிப்புகளை பார்த்தால் திமுகவிற்கு 190க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் எனவும் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இன்றும் நேற்றும் நடந்த சில வாக்கு இயந்திரங்களின் திருட்டுகளும், ஒரு பட்டனை அமுக்கினால் பாஜகவிற்கு அதிமுகவிற்கும் விழுவதாக வந்த செய்திகள் இவை அனைத்தும் பெரிய அளவு மாற்றத்தை எற்படுதாதாம். எப்படி பார்த்தாலும் வாக்கு எண்ணிக்கை மட்டுமே கூடும் குறையும் எனவும் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற செயல்கள் செய்ய முடியாது எனவும் கூறுகிறார்கள். அதனால் திமுகவே வரும் எனவும் அடித்து கூறுகிறார்கள் இன்னொரு சாரார் மக்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top