திருப்பூர் : தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டால் ஸ்டாலின் குடும்பம் முதலில் தான் சிறைக்கு செல்லும் என்று தேதிமுக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று மே தின பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறும்போது, ” திமுகவும் , அதிமுகவும் தமிழகத்தை ஆட்சி செய்து நாசமாக்கிவிட்டனர்.

அதிகம் படித்தவை:  போச்சு.. போச்சு..என் வாழ்க்கையையே அந்த 2 பேர் சீரழித்து விட்டார்கள்.. வக்கீலிடம் சசிகலா புலம்பல்

நாளை பதவியில் இருப்போமா, இல்லையா என்கிற நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலை உள்ளது. மின்வெட்டு பிரச்சினையால் தமிழகத்தில் மின்சாரத்துறை மின்மயானத்துறையாக மாறியுள்ளது.

ஊழல் செய்பவர்களை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். அவ்வாறு சட்டம் கொண்டுவந்தால் முதலில் சிறை செல்வது மு.க.ஸ்டாலின் குடும்பம்தான் ” விஜயகாந்த் கூறினார்.

அதிகம் படித்தவை:  கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட சயனின் குழந்தை கழுத்தில் வெட்டுக்காயம்..! கேரள போலீசார் கோவை விரைவு..!

இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசிகொண்டிருந்த போது தொண்டர்கள் கூட்டலிட்டு கொண்டு இருந்தனர். அப்போது கூச்சலை நிறுத்துமாறு விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து தொண்டர் கூச்சலிட்டனர். இதனால் விஜயகாந்த பாதியிலேயே பேச்சை முடித்தார்.