fbpx
Connect with us

Cinemapettai

தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் கைது-போர்களமான தலைமை செயலகம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் கைது-போர்களமான தலைமை செயலகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும். அப்படி இல்லையெனில் 13 பேரை கொன்ற விவகாரத்தில் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி, பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணித்த பின், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, முதல்வர் வாயிலில் இருந்து ஸ்டாலின் குண்டுக்கட்டாக காவலர்களால் வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் தலைமை செயலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினருடன் மறியல் போராட்டம் நடத்தினர்.

ஆயிரக்கணக்கான திமுகவினர், பொதுமக்கள் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ⛓கைது செய்யப்பட்ட ஸ்டாலினை விடுவிக்க கோரி முழுக்கம் எழுப்பியும் வருகின்றனர். ஸ்டாலின் ஏற்றப்பட்ட வாகனத்தை செல்ல விடாமல் திமுகவினர் தடுப்புகளை அமைத்து போராட்டம் நடத்தினர். தடுப்புகளை அகற்ற முயன்ற போலீஸ் உடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். திமுகவினரின் தடுப்புகளை அகற்ற முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர், மக்கள் திரண்டதால் தலைமைச் செயலகம் போர்களம் போல் காட்சியளிக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top