விஜய் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் வாங்கியுள்ள மதிப்பெண் குறித்த செய்தி வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

நடிகர் விஜயின் மூத்த மகனான சஞ்சய், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தமிழக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான போது, நடிகர் விஜயின் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கினர்.

ஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய் என தற்போது தெரியவந்துள்ளது. விஜயின் மகன் சஞ்சய் சி.பி.எஸ்.சி வழிக்கல்வியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்வு எழுதியுள்ளதாகவும், அந்த தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகத்தில் இருந்த விஜய் ரசிகர்கள், சோகத்தில் உள்ளனர்.