Tamil Cinema News | சினிமா செய்திகள்
நெடுஞ்சாலை பட ஹீரோயின் ஞாபகம் இருக்கா.? கேரள புடவையில் செம ஸ்லிம்மாக வைரலாகும் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் நெடுஞ்சாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷிவதா. இந்த படத்தில் சிறப்பாக நடித்து பல தரப்பினரிடமும் பாராட்டை பெற்றார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்கள் கவனமாக தேர்வு செய்யாததால் பெரிய அளவு வெற்றி பெறாமல் அதே கண்கள் மற்றும் ஜீரோ படங்கள் வசூல் ரீதியாக சற்று சரிவை சந்தித்தன.
திருமணம் செய்து கொண்டாலும் தற்போது இவர் கதாநாயகியாகவே ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு பல வருடமாக நெருங்கிய நண்பராக இருந்த முரளி கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

sshivada
திருமணமான பிறகு ஒருசில படங்களில் நடிப்பதை தவிர்த்து வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். 2019 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது சாவிதான மற்றும் முரளி கிருஷ்ணன் இவர்கள் பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

sshivada
தற்போது ஷிவதா வல்லவனுக்கு வல்லவன் காட்டம் மற்றும் இரவாகாலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
