fbpx
Connect with us

Cinemapettai

உச்சம் தொட்ட பாகுபலி 2: 1000 கோடி வசூலில் இணைந்து மாபெரும் சாதனை

Baahubali_1000cr

News | செய்திகள்

உச்சம் தொட்ட பாகுபலி 2: 1000 கோடி வசூலில் இணைந்து மாபெரும் சாதனை

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படமான ‘பாகுபலி 2’, 1000 கோடி வசூலில் இணைந்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான இப்படம் இந்தியாவில் ரூ.800 கோடி வசூலித்தும், வெளிநாடுகளில் ரூ.200 கோடி வசூலித்தும் ரூ.1000 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்த தகவலை பிரபல வர்த்தக வல்லுநர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபாஸ் நடிப்பில் உருவான இப்படம் தென்னிந்தியாவில் ரூ.735 கோடியும், வட மாநிலங்களில் ரூ.180 கோடியும் வசூல் செய்துள்ளது. இதைத் தவிர வெளிநாடுகளிலும் பட்டையை கிளப்பி வரும் ‘பாகுபலி 2’ அமெரிக்க பாக்ஸ் ஆபீசில் மட்டும் ரூ.100 கோடி வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘பாகுபலி 2’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலில் இணைந்ததையடுத்து சமூக வலைத்தளங்களில் #1000croreBaahubali #1000ccBaahubali #BaahubaliTheConclusion போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது. இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்த்து வரும் ‘பாகுபலி 2’ திரைப்படம் இந்தாண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top