Tamil Cinema News | சினிமா செய்திகள்
“நான் துல்கர் சல்மானின் ரசிகன் ஆகிவிட்டேன்” : பாகுபலி இயக்குனர் ராஜமௌலி !
துல்கர் சல்மான் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஹீரோ.
மகாநதி
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ரிலீசாகும் மகாநதி / நடிகையர் திலகம் (நடிகை சாவித்ரியின் பயோபிக்) படத்தில் நடிகர் ஜெமினி கணேசன் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் என சாவித்ரி – ஜெமினி கணேசன் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும், துல்கர் சல்மானும் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்த இயக்குனர் ராஜமௌலி பின் வருமாறு பாராட்டியுள்ளார்.
“கீர்த்தி சாவித்ரி வேடத்தில் அருமையாக நடித்துள்ளார். நடிகை சாவித்ரி அவர்களை நம் கண் முன்னே கொண்டுவந்துவிட்டார். துல்கர் சல்மானும் அசத்தலாக அசத்திவிட்டார். நான் இன்று முதல் அவரின் ரசிகன்.” என்று தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் நாக் அஸ்வின் அவர்களையும் பாராட்டியுள்ளார்.
