பாகுபலி முதல் பாகம் வந்ததும், தெலுங்கு பட இயக்குனரான ராஜமௌலி அவர்களை இந்திய சினிமாவே உற்று நோக்கியது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பது தான் அந்த வருடம் முழுவதும் உள்ள ஹாட் டாபிக். பாகுபலி 2 வது பாகம் வெளிவந்ததும் இந்திய முழுவதும் பிரபலமாக இருந்த ராஜமௌலி உலக பேமஸ் ஆனார்.

bahubali

சீனா, ஜப்பான் மற்றும் திரையிடப்பட்ட அணைத்து நாடுகளிலும் வசூல் வேட்டை நடத்திய படம். ஹீரோ பிரபாஸ் மற்றும் கட்டப்பா சத்யராஜ் என இருவருக்கும் மெழுகு சிலை பிரபல அருங்காட்சியகம் நிறுவியுள்ளது.

இது மட்டுமன்றி இப்படத்தை பாகிஸ்தானிலும் மே 2017 இல் வெளியிட்டார்கள். அங்கும் படம் சூப்பர் ஹிட் தானாம். நம் தென்னிந்திய மொழி படம் டப்பிங் செய்து ரிலீஸ் ஆனது இதுவே முதல் முறை. அதே போல் எந்த ஒரு காட்சியையும் நீக்காமல் ஓகே சொன்னதாம் தணிக்கை குழு.

பாகிஸ்தான் சர்வதேச பிலிம் பெஸ்டிவல் ( PIFF )

வரும் மார்ச் 29 தொடங்கி ஏப்ரல் 1 வரை, நான்கு நாட்கள் நடை பெறுகிறது இந்த பிலிம் பெஸ்டிவல். இதில் பல குறும்படங்கள், டாக்குமெண்டரி, சினிமா என தைரயிட உள்ளனர்.

இந்நிலையில் “இந்த விழாவிற்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும். பாகுபலி படத்தின் வாயிலாக நான் பல வெளிநாடுகளுக்கு சென்றேன், இதில் நாம் அதிகம் ஆர்வமாக உள்ள நாடு பாகிஸ்தான். அழைத்தமைக்கு நன்றி.” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எனினும் தான் எப்பொழுது புறப்பட போகிறேன் என்பதை அவர் குறிப்பிட வில்லை. நம் இந்திய படங்களான டியர் ஜிந்தகி, ஹிந்தி மீடியம், நில் பேட்டே சனாட்ட, மராத்தி படமான சைருத் போன்றவை திரையிடப்போகிறார்கள். அதே போல் பாகுபாலியும் திரையிடப்படுமா, அல்லது எதாவது சிறப்பு விருந்தினர், செமினாரில் கலந்து கொள்ள ராஜமௌலிக்கு அழைப்பு வந்துள்ளதா போன்ற தகவல்கள் சரி வர தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.