உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் கோலிவுட் , பாலிவுட், டோலிவுட் என மூன்று  சினிமாவில் பிஸியாக நடித்து வருபவர்.  கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’  படத்தில் இருவரும் முதல் முறையாக சேர்ந்து நடித்துள்ளனர்.

Shruti Haasan-Social

சில மாதங்களுக்கு முன் தந்தை கமல்ஹாசனுக்கு தன் காதலர்  மைக்கேல் கோர்சலை அறிமுகப்படுத்திய ஸ்ருதி, பின்னர்  சில தினங்களுக்கு முன்பு தாய் சரிகாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற மறைந்த கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணாதாசன் – வினோதினி திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.

தற்போது புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் அவர் அமைதி காத்து வருகிறார். விரைவில் இவர் கல்யாண அறிவிப்பை பலரும் எதிர் பார்த்து வரும் சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலையில் ஸ்ருதியின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்..

“சில நேரங்களில் எனக்கு கமல் சாரின் நினைவு வந்து விடுகின்றது உங்களின் சில போட்டோவை பார்க்கும் பொழுது. அதே கெத்து.”

இதற்க்கு பதில் தரும் விதமாக ஸ்ருதி” அடக்கடுவளே. ஒன்று தான் ஆனால் வேறு” என்று பதில் தந்துள்ளார்.sr

இந்த டீவீட்டை பலரும் ரீ ட்வீட் செய்து வருகின்றனர்.