fbpx
Connect with us

Cinemapettai

அய்யோ பாவம்!! சிக்கிட்டார் சுருதி வச்சு செய்ய போகும் நெட்டிசன்கள்…!

Shruti Haasan-Social

News | செய்திகள்

அய்யோ பாவம்!! சிக்கிட்டார் சுருதி வச்சு செய்ய போகும் நெட்டிசன்கள்…!

நடிகர் கமல் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, பாலிவுட் என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டியில் நான் சமூக வலைதளமான ‘ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.

நான் நடித்து வரும் படங்கள் பற்றிய விவரங்களையும் இனிமேல் நடிக்கப்போகும் படங்கள் சம்பந்தமான தகவல்களையும் டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறேன்.

சினிமா அல்லாத பொதுவிஷயங்கள் குறித்தும் எனது கருத்துக்களை அவ்வப்போது அதில் பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் எந்த டுவிட்டர், ரசிகர்களுடன் என்னை தொடர்பில் வைத்து இருக்கிறதோ இல்லையோ  அதன் மூலம் நான் சில சமயங்களில் பல கஷ்டங்களையும் சந்திக்க நேர்கிறது. சமூக ஊடகங்கள் நல்ல விஷயம்தான். அதன்மூலம் அனைத்து தரப்பு மக்களுடனும் தொடர்பு கொள்ள முடிகிறது.

நிறைய விமர்சனங்களும் அதில் பரவுகிறது. தனிப்பட்ட முறையில் ஒருவரின் சொந்த வாழ்க்கை பற்றியும் அதில் அவதூறுகள் பரப்பப்படுவதுதான் வேதனை அளிப்பதோடு, சொந்த வாழ்க்கையில் அதிருப்தியாக உள்ளது. அப்படிப்பட்டவர்கள் பக்கத்தில் இருப்பவர்களை குறை சொல்லி ஆனந்தப்படுவார்கள். டுவிட்டரிலும் அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இவர்கள் டுவிட்டர் முகப்பில் கூட தங்கள் படங்களை வைத்துக்கொள்ளாமல் நடிகர்-நடிகைகளின் படங்களை வைத்துக்கொள்கிறார்கள்.

மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதற்கும் விமர்சிப்பதற்கும் கூட அவர்களுக்கு நடிகர், நடிகைகளின் முகப்பு படங்கள் தான் தேவைப்படுகிறது. தங்களுடையை சொந்த படங்களை டுவிட்டர் முகப்பில் வைத்துக்கொள்ள பயப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் வெட்டித்தனமான விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நேரத்தை யாரும் விரயம் செய்யக்கூடாது.

விமர்சனங்களுக்கு பயந்து சமூக வலைதளத்தில் இருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன் என சுருதிஹாசன்  தெரிவித்துள்ளார். இவரது கருத்து வரவேற்க வேண்டிய ஒன்று தான்..! ஆனால் என்ன பண்ணுவது பாஸ்.. நம்ம நெட்டிசன்கள் இதனை செய்யக்கூடாது  என்று கூறினால் அதனைத்தான் நம்ம ஆள்கள் வேகமாக செய்வார்கள். சுருதிஹாசனை எப்படி கலாய்க்கப் போகிறார்களோ தெரியலை. இப்பவே கண்ணக் கட்டுது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top